இது எங்கள் நாடு, உடனே எல்லோரும் வெளியேறுங்கள் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால், கனடா மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கனடா அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கிடையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தி, இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இப்போது, “கனடா எங்கள் நாடு” என்று அவர்கள் அறிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில், “இது எங்களுடைய நாடு; இங்குள்ள வெள்ளையர்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுங்கள்” என கோஷமிட்டனர்.
இந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கனடா அரசு இதை கண்டும் காணாமல் இருப்பதால், எதிர்காலத்தில் மிகப்பெரிய விபரீதம் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.