அமெரிக்காவை இருளில் இருந்து ஜோ பிடென் மீட்பார்`… ஒபாமா ’ஆரூடம்’

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (16:02 IST)
அமெரிக்காவில், நேற்று ஒரேநாளில் மட்டும் 2200 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில்,  வரும் நவம்பர் மாதத்தில், அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அவருக்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒபமா கூறியுள்ளதாவது, அமெரிக்காவில், 6 லட்சத்திற்கு மேலான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் அமெரிக்காவை,இருளில் இருந்து மீட்கும் சக்தி ஜோ பிடெனுக்கு தான் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

ஒபாமா அதிபராகப் பதவி வகித்தபோது, ஜொ பிடென்  துணை அதிபராகப் பதவிவகித்தவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்