2022 வரை கொரோனா ஆதிக்கம்? டேஞ்ஜர் லிஸ்டில் இந்தியா...!

புதன், 15 ஏப்ரல் 2020 (14:55 IST)
2022 ஆம் ஆண்டு கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என ஆய்வின் முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 
 
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்து மனித இனத்திற்கே அச்சம் ஏற்படுத்தி வரும் நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கிவிட்டதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,597 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,78,503 ஆக என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு வரை சமூக விலகலை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என ஆய்வின் முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 
 
ஹார்வர்ஃபு பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிகள் தெரிவிப்பன பின்வருமாறு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சையோ, மருந்தோ கண்டுப்பிடிக்கப்படவில்லை. இதனால், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதே இதன் தற்காலிக தீர்வாக உள்ளது. 
 
கடந்த 2003 ஆம் ஆண்டு சிறிய அளவில் தலைக்காட்டிய சார்ஸ் வைரஸ், சிறிது இடைவெளிக்கு பின் பெரிதாக வெடித்தது. அதேபோல கொரோனா ஒவ்வொரு குளிர் காலத்திலும் தலைக்காட்ட வாய்ப்புள்ளது. 
 
சீனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டதும் ஊரடங்கை தளர்த்தியதால் அங்கு மீண்டும் வைரஸ் தொற்று துவங்கியுள்ளது. இதனால், முறையான மருந்தும் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2020 ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை முற்றிலுமாக வெல்ல முடியும். 
 
குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சீனா, இந்தியா போன்ற நாடுகள் இதை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்