இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தருகிறார் ஜோ பைடன்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (11:18 IST)
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஜோ பைடன் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வர இருப்பதாகவும் அவர் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டொனால்ட் கூறிய போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு முதல் முதலாக பயணம் செய்கிறார் என்றும் இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்திய வருகையை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே அமெரிக்காவின் பாதுகாப்பு படையினர் இந்தியா வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் இந்தியா வர இருக்கும் தகவல் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்