விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:24 IST)
மதுரை விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை இன்னும் தமிழக அரசு கொடுக்கவில்லை என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகம் வந்தார்.  மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
 
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது என்றும் விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது என்றும் ஆனால் தமிழக அரசு இன்னும் அதற்கு தேவையான இடத்தை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்