அணு உலை நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான்! – அதிர்ச்சியில் உலக நாடுகள்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (09:36 IST)
ஜப்பான் புக்குஷிமா அணு உலை நீரை கடலில் திறந்து விட போவதாக அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரிடரின்போது புக்குஷிமா அணுஉலை விபத்து சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருந்து ஜப்பான் வேகமாக மீண்டு வந்துள்ள நிலையில் புக்குஷிமா அணு உலையும் கதிரியக்கம் வெளிபடாதவாறு சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேசமயம் அணு உலை விபத்தால் தேங்கிய 1 மில்லியன் டன் கதிரியக்கம் கொண்ட தண்ணீரை அப்புறப்படுத்த வழியின்றி ஜப்பான் யோசித்து வந்தது.

தற்போது வேறு வழியின்றி கதிரியக்கம் கொண்ட 1 மில்லியன் டன் தண்ணீரை கடலில் கொட்டுவது என ஜப்பான் முடிவு செய்துள்ளது. ஆனால் அவ்வாறு கடலில் கொட்டப்பட்டால் கதிரியக்க தண்ணீர் கடல்வாழ் உயிரினங்களை பாதிப்பதுடன், சூழலியலில் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்