கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் கிடையாது! – அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (10:39 IST)
இத்தாலியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதியம் கிடையாது என்ற அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020ல் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் அதிகமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஊதியம் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பலர் சாலைகளில் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்