வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.. பொதுமக்களுக்கு இத்தாலி அரசு எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:11 IST)
இத்தாலி நாட்டில் உள்ள பொதுமக்கள் அவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இத்தாலி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் வெயில் அடித்து வருகிறது என்பதும் அதிக வெப்பம் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்  இத்தாலியில் கொளுத்தும் வெயில் காரணமாக அல்பாயின் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் வெப்பத்திலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்வதற்காக  பல்வேறு வழிகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வரும் நிலையில் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நாட்டு அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 
 
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக வீட்டில் உள்ளே இருக்கும் மாறும் தெரிவித்துள்ளது. இத்தாலி நாட்டில் வரலாறு காணாத வகையில் அடித்து வருவதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அவஸ்தையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்