இஸ்ரேலில் விடிய விடிய குண்டு மழை.. 4 நாள் போரில் 1500 பேர் பலி?

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:52 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இடையே நடைபெற்று வரும் போரில் கடந்த நான்கு நாட்களில் 1500 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், ஹமாஸ் இயக்கத்தின் திடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பதட்டம் அடைந்தது.

இஸ்ரேல் படைகள் திருப்பித் தாக்கியதில் இரு தரப்பிலும் கடும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நான்கு நாட்கள் இரு தரப்பிலும்  குண்டு மழை பொழிந்துள்ள நிலையில் இதுவரை 900க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் மற்றும் 600க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் என மொத்தம் 1500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு விடிய விடிய இரு தரப்பிலும் குண்டு மழை பொழியப்பட்டதாக கூறப்படுகிறது.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் போர் பிரகடனத்தை அறிவித்துள்ள நிலையில் பாலஸ்தீனம் மீது ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டது. பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தலையிட இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்