நல்ல உயர்ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றும், தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனைகளை விட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும் கேரள மாநில இளைஞர் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை நினைவு கூர்ந்த சாஜி செரியன், "அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அப்போது தனக்கு அரசு மருத்துவமனையை விட தனியார் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைத்ததாகவும், 14 நாட்களில் ஆபத்தான நிலையில் இருந்தும் காப்பாற்றப்பட்டேன்" என்றும் தெரிவித்தார். "அரசு மருத்துவமனைகளில் இன்னும் அந்த அளவுக்கு வசதிகள் இல்லாமல் இருக்கலாம். எனவே, மேம்பட்ட சிகிச்சை பெற நீங்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்" என்றும் அவர் கூறினார்.
அதன்பின், அவர் தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அரசு மருத்துவமனைகளை தான் இழிவுபடுத்திப் பேசவில்லை என்றும் அவர் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.