இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று ஒரே நாளில் 37,290 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் ஒரு 79 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று ஒரே நாளில் கேரளாவில் 1,39,287 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்று மட்டும் 32,978 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது