பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா சுந்தர் பிச்சை.? இதுதான் காரணமா..?

Senthil Velan
சனி, 2 மார்ச் 2024 (18:20 IST)
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பதவி விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சுந்தர் பிச்சையின், தனித்துவமான திறமையையும், மாறுபட்ட வித்யாசமான சிந்தனையையும் கண்ட கூகுள் நிறுவனம், அதனை அங்கீகரிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியில் அமர்த்தியது.
 
அண்மை காலத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மீதான தாக்கம் அதிகரித்து வருவதால், கூகுள் தனது நிறுவனம் சார்பில் பல AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. 
 
அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் குறித்து சர்ச்சை கிளம்பியது. அதாவது, ஜெமினி சாட்பாட்டில் படங்களை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைத்தளங்களில் சில பயனர்கள் வெளியிட்டது பூதகரமாக மாறியது.

இதன் மூலம் இந்த தொழில்நுட்பம் இன ரீதியான சண்டைகளை உருவாக்குகிறதா? என்ற சர்ச்சையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன. இந்த நிலையில், ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் சர்ச்சைக்கு சுந்தர் பிச்சை, பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சிகள் செய்வதாக அறிவித்தார்.

ALSO READ: முதல்வர் பிளக்ஸ் பேனர் கிழிப்பு.! திமுக உட்கட்சி பூசலால் பரபரப்பு..!!
 
இந்த AI தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்பதால், இதன் தாக்கத்தை சுந்தர் பிச்சை எதிர்கொள்ளக்கூடும் என்று  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்து அவரை  மாற்றுவதற்கான குரல்கள் வளர்ந்து வருகின்றன. இதனால் தனது பதவியில் இருந்து சுந்தர் பிச்சை விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்