கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம்- தூதர் கண்டனம்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (17:16 IST)
கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் பிரம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றின்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் செய்து, வைக்கப்பட்டிருந்தது.  இந்த வீடியோ சமூக  ஊடகத்தில் பரவிய நிலையில்,பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலையை ஆதரிப்பது போன்று கனடாவில் ஒரு கண்காட்சி அணிவகுப்பு நடைபெற்றது. அதில், ரத்தக் காயங்களுடன் இந்திரா காந்தி சிலை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் நடந்த அணிவகுப்பு வீடியோ பற்றி உறுதிப் படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதர் கேமரான் மெக்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்