ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை- கனடா அறிவிப்பு

புதன், 12 ஏப்ரல் 2023 (19:36 IST)
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல  பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில்,கனடாவும் ரஷியா மீது பொருளாதாரத்தடைகள் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து  1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன.

எனவே  உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  ஏற்கனவே உக்ரைனுக்கு நேட்டோ கூட்டமைப்புகளின் ஆதரவு உள்ள நிலையில் சமீபத்தில் பின்லாந்து மற்றும் ஸீவீடன் ஆகிய நாடுகள் இதில் இணைந்து உக்ரனுக்கு ஆதரவளித்தன.

இந்த நிலையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல  பொருளாதார தடைகள் விதித்துள்ளன.

அந்த வகையில், கனடா அரசு, உக்ரைனுக்கு 8 பில்லியன் டாலர் பொருளாதார உதவிகள் வழங்கியுள்ளதுடன், ராணுவ உதவிகள் வழங்க தயாராக உள்ளதாகவும், அதன்படி, 21,000 ரைபிள்கள், 38 இயந்திர துப்பாக்கிகள், 24 லட்சம் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும் வழங்கப்படும்  கூறியுள்ளது.

மேலும்,ரஷியாவைச் சேர்ந்த 14 நபர்கள் மற்றும் 34 நிறுவனங்கள் மீது கனனடா அரசு பொருளாதாரத் தடைகள் விதிப்பதாகக் கூறினார்.  ரஷிய நிதித்துறை சம்பந்தமான 9 நிறுவனங்களுக்கு கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்