கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்டது இந்திய கடற்படை

Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (20:14 IST)
சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சோமாலியா அருகே  சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.

இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாகவும் இந்திய கடற்படைக்கு தகவல் வெளியாகியுள்ளது.  அடையாளம் தெரியாத 5 முதல் 6 பேர் வரை பயங்கர ஆயுதங்களுடன் இந்த கப்பலை கடத்தியதாக கூறப்பட்டது.

இதையடுத்து, இந்திய கடற்படை உடனடியாக நடவடிக்கை எடுடுத்து, கடத்தப்பட்ட சரக்கு கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட  கப்பல் இருக்கும் இடத்தை இன்று அதிகாலை கண்டறிந்த விமானம் கப்பலுக்குள் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த நிலையில்,  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் கப்பல் முழுமையாக மீட்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் இறங்கிய  இந்திய கடற்படையின் கமாண்டோக்கள் அதிரடியாக செயல்பட்டு மீட்டுள்ளது.

கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்தியர்கள் 15 பேர் உட்பட 21 பேர் நலமுடன் இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய கடற்படையின்  ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் மூலம் சரக்கு கப்பலை கடற்படையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்