15 இந்தியர்கள் உள்ள கப்பலை கடத்தியது கடற்கொள்ளையர்களா? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Mahendran

வெள்ளி, 5 ஜனவரி 2024 (14:01 IST)
15 இந்தியர்கள் இருக்கும் சரக்கு கப்பல் கடத்தப்பட்டதாக சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த கப்பலை கடத்தியது கடல் கொள்ளையர்கள் என தகவல் வந்துள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  
 
இந்த கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டு உள்ளதாகவும் இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாகவும் இந்திய கடற்படைக்கு தகவல் வெளியாகியுள்ளது.  அடையாளம் தெரியாத 5 முதல் 6 பேர் வரை பயங்கர ஆயுதங்களுடன் இந்த கப்பலை கடத்தியுள்ளனர்.

ALSO READ: தென் கொரியா மீது வட கொரியா திடீர் தாக்குதல்: புதிய போர் தொடங்குகிறதா?
 
இந்திய கடற்படை உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும்  கடத்தப்பட்ட சரக்கு கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டதாகவும்  கப்பல் இருக்கும் இடத்தை இன்று அதிகாலை கண்டறிந்த விமானம் கப்பலுக்குள் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன்  வெளியான தகவலின்படி இந்த கப்பலை கடத்தியது கடற்கொள்ளையர்கள்தான் என்றும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் கப்பல் முழுமையாக மீட்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்