எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அழகி பட்டம்

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (07:05 IST)
இங்கிலாந்து நாட்டில் வாழும் காங்கோ அழகிக்கான போட்டி சமீபத்தில் நடைபெற்ற போது அதில் 22 வயது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் அழகியாக தேர்வு செய்யபப்ட்டார். காங்கோ அழகியாக தேர்வு செய்யப்பட்ட அவர் தன்னைப்போல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவை செய்யவிருப்பதாக ஆனந்தக்கண்ணீருடன் கூறினார்.



 


காங்கோ அழகி பட்டத்தை வென்ற இளம்பெண்ணின் பெயர் ஹோர்சிலி சிண்டா வா போங்கோ. இவருக்கு 11 வயதிலேயே எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் இவர் மனம் தளராமல் கல்வியில் கவனம் செலுத்தியதால் இவர் தற்போது இளங்கலை பட்டப்படிப்பு மாணவியாக உள்ளார்.

இந்த போட்டியின் அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஹோர்சிலி இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு புத்திசாலித்தனமான பதிலை அளித்து அனைவரையும் அசத்தினார். இதனைத் தொடர்ந்து மிஸ் காங்கோ யு.கே 2017-ஆக போங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார். தனக்கு கிடைத்த வெற்றி தன்னை போன்ற எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்