சீனாவில் கனமழை - நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (21:05 IST)
சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கொரொனாவில் இருந்து மீண்டெழுந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென்று நிலச்சரி ஏற்பட்டதில், பல உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், கடந்த ஒரு வாரத்த்திற்கும் மேலாக சீனாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில், பல நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள சாலைகள், பாலங்கள் எல்லாம் சேதமடைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜியாங் மாவட்டத்தில் உள்ள ஹாஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டத்தில், பலர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, இடிபாடுகளை அகற்றி புதையுண்டவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்