ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:33 IST)
ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி தொடர் நேற்று சென்னையில் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் சீனா அணியை இந்தியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  
 
ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் இதில் கலந்து கொண்டன
 
நேற்று தொடங்கிய முதல் போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதியது. இதில் இந்திய வீரர்கள் அபாரமான விளையாடி அடுத்தடுத்து ஏழு கோல்கள் பதிவு செய்தனர். சீனா 2 கோல்கள் மட்டும் போட்டிருந்ததால் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 
இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் மற்றும் வருண் குமார் தலா 2 கோல்கள் பதிவு செய்தனர். சுக்ஜீத், மன்தீப் மற்றும் ஆகாஷ்தீப் தலா ஒரு கோல் பதிவு செய்தனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்