சீனா நாட்டின் சோங்கிங்கில் கனமழை...15 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (15:25 IST)
சீனா நாட்டின் சோங்கிங்கில் கனமழை பெய்து வரும் நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் அதிபர் ஜிங்பிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள தென்மேற்கு சீனாவின் சோங்கில் என்ற மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த கனமழையினால் 19 மாவட்டங்களில் உள்ள 130000 க்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளாதாகவும் கூறப்படுகிறது.

மேலும், யாங்சே ஆற்றங்கரையோரப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், 75000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், அங்குள்ள மக்ககள் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இந்தக் கனமழையினால் இதுவரை 15 பேர் பலியானதாகவும், 4 பேரைக் காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பேரிடர் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்