ஒரு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை

செவ்வாய், 4 ஜூலை 2023 (07:46 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் மற்றும் 11 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கேரளாவில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது என்பதும் அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடுக்கி உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன 
 
மேலும் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வங்க கடலில் உருவான சூறாவளி காற்றழுத்த தாழ்வு மற்றும் கேரள கடற்கரையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்