ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 23 பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.
இந்நிலையில் ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்நாட்டை சேர்ந்த 30 வயதான நபர் இத்தாலியில் இருந்து டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.