ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்; பாதிப்பு நிலவரம் என்ன?

திங்கள், 1 நவம்பர் 2021 (10:16 IST)
ஜப்பானில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்களை சந்திக்கும் நாடாக ஜப்பான் தீவுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை இபராகி மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 60 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் இபராகி முதல் புகுஷிமா வரை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்