கோத்தயபய ராஜபக்சே உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு பலப்படுத்த கோரிக்கை!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (21:05 IST)
இலங்கைக்கு திரும்பியுள்ள முன்னாள் அதிபர்  கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆபத்து என்பதால்  அவரின் பாதுகாப்பு அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் உணவுப் பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அரசியல்வாதிகள் பலரின் வீட்டை தீக்கிரையாக்கினர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் மாளிகையும் தாக்கப்பட்ட நிலையில் அவர் இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவு, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தாய்லாந்தில் அடைக்கலமானார்.

பின்னர் இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கெ பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் நிலைமை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை சென்றடைந்துள்ளார்.

51 நாட்களுக்குப் பின், பண்டாரநாயக்கே விமான நிலையத்தில் வந்திறங்கிய ராஜபக்சே கொழும்பு விஜிர்மா மாவதா பங்களாவில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு உச்சப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டக்காரர்கள் போரராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் அதிபருக்கு வழங்கப்படும் சலுகைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவரது உயிருக்கு ஆபத்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்