ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்ட கொரில்லா...

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (22:55 IST)
தென்னாப்பிரிக்காவில் ஜோகன்பெர்க் விலங்கியல் பூங்காவில் 34 வயதுள்ள ஒரு ஆண் கொரில்லாவுக்கு சில நாட்களாக சளி மற்றூம் தும்மல் காரணமாக பெரும் சிரமப்பட்டு கொண்டு இருந்தது.

அங்குள்ள விலங்கியல் பூங்கா மருத்துவர்கள் கொரில்லாவுக்குச் சிகிச்சை அளித்தும் அது குணமடையவில்லை.

இதனால் 64 கிமீ., தூரதில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அதனை அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

இங்குதான் 210 எடை கொண்ட  கொரில்லாவை தாங்கக் கூடிய சிடி ஸ்கேன் கருவி உள்ளது என்பதால் கொரில்லாவை ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டு சென்றனர். மருத்துவர்களை கொரில்லாவை பரிசோதனை செய்து அதன் மூக்கில் கட்ட்சிகள் வளர்துள்ளதைக் கண்டுபிடித்தனர். வரும் ஜூலை 9 ஆம் தேதி கொரில்லாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்