ஷாப்பிங் செல்லும் பேய்கள்: சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர் மார்க்கெட்!

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (16:05 IST)
பேய் கதைகள் நம்பமுடியாத ஒன்றாக தோன்றினாலும், அதில் சுவாரஸ்யம் இருக்கும். அப்படிதான் இங்கிலாந்த்தின் மசாசூட் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் பகுதியில் உள்ள மார்கெட் பேஸ்கெட் என்ற சூப்பர் மார்க்கெட்டில் பேய்கள் ஷாப்பிங் செய்கிறதாம். 
 
அதாவது, பேய்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாமாக தேர்வு செய்து எடுத்தி செல்கிறதாம். இதை ஒருவர் நேரில் பார்த்தாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். 
 
அந்த நபர் மட்டுமின்றி பலர் அந்த சூப்பர் மார்க்கெட்டில் பேயை பார்த்தோம். பேய் கருநீலக் கண்களுடன், கருமையான கூந்தலுடன், வெள்ளைத் தோலுடன் வெள்ளை அங்கி உடுத்தியிருந்தது என்ரெல்லாம் பதிவிட்டு உள்ளனர்.
அந்த சூப்பர் மார்கெட் உள்ள பகுதியில் குடியிருப்பவர்களில் பல பேர் இரவு நேரங்களில் பேய்கள் வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு வலம் வருவதை கண்ணால் பார்தததாக குறிப்பிடுகின்றனர். இது குறித்து அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகி பேய்கள் குறித்த வதந்திகள் உண்மைதான் ஆனால் பேய் எல்லாம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
ஆள் ஆளாக்கு பேய் குறித்த அனுபவத்தை கூறுவதால், பேய்களுடன் ஷாப்பிங் செய்யவே தினசரியும் அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு பலர் வந்து செல்கின்றனர். இதனால் அந்த சூப்பர் மார்க்கெட்டிலில் வியாபாரம் சூப்பராகவே நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்