முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (07:58 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபிள்யூ புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71) 43-வது அதிபராக பதவி வகித்தவர். 
 
அல்சர் மற்றும் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பார்பரா புஷ் ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் ஜார்ஜ் புஷ்சும் பார்பரா புஷ்சும் தங்களது 73வது திருமண நாளை கொண்டாடினார்கள். 
 
இந்நிலையில் பார்பரா புஷ் மரணமடைந்ததாக ஜார்ஜ் புஷ்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்