அபாயத்தின் உச்சத்தில் காசா: ஐ.நா.வின் பாலஸ்தீன விவகாரங்களுக்கான இயக்குனர் பேட்டி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (14:27 IST)
அபாயத்தின் உச்சத்தில் காசா நகரம் இருப்பதாக ஐ.நா.வின் பாலஸ்தீன விவகாரங்களுக்கான இயக்குனர் ஆதம் பலுகாஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் இந்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
 
 காசாவில் 13 ஆயிரம் பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் காசாவின் தெற்கு கரை அபாயகரமான உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
குறைவான கட்டமைப்பில் அதிக மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தாக்குதலுக்கு முன்பே காசாவில் உணவு தட்டுப்பாட்டு நிலவை வந்ததாகவும் அவர் தெரிவித்தார். 
 
போர் சூழல் காரணமாக இராணுவத்தை கடந்து மக்களின் கைகளிலும் துப்பாக்கி உள்ளது என்றும் மக்களுக்கான நிவாரண முகாமில் இருந்து 776 கண்ணீர் புகை குண்டுகளை கண்டெடுத்தோம் என்றும் காசாவிற்கு உடனடி தேவை போர் நிறுத்தம் மட்டுமே என்றும் ஐ.நா.வின் பாலஸ்தீன விவகாரங்களுக்கான இயக்குனர் ஆதம் பலுகாஸ் உடன் சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்