காசா மருத்துவமனை மீது குண்டு வீசிய இஸ்ரேல்? 500 பேர் பலி

புதன், 18 அக்டோபர் 2023 (07:57 IST)
காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு வீசியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் என 500 பேர் பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத குழுக்களுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டிருந்தாலும் பாலஸ்தீனம் தரப்பில் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று திடீரென காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 500 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை மீது ஏவுகணை வீசி விட்டதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் பாலஸ்தீனத்தின் ஏவுகணைகள் தான் தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்திருக்கும் என்றும் நாங்கள் மருத்துவமனை மீது ஏவுகணை வீசவில்லை என்றும் இஸ்ரேல் பதில் அளித்துள்ளது

Edited by siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்