விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

Siva

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (20:12 IST)
தமிழக அரசியலில் திடீரென பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய மாற்றமாக அமித்ஷாவின் சென்னை விசிட் இருக்க, இந்த விசிட்டால் விஜய்யின் கனவு கலைந்ததாக கூறப்படுகிறது.
 
"தமிழக வெற்றிக்கழகம்" என்ற புதிய கட்சியை உருவாக்கிய விஜய், முதல் தேர்தலிலேயே தனித்து போட்டியிடுவதை தவிர்த்து, ஒரு பெரிய அரசியல் கட்சியுடன் இணைந்து சக்திவாய்ந்த கூட்டணியாக களமிறங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.  
 
இந்த நோக்கத்தில் அதிமுகவுடன் நெருக்கம் ஏற்படுத்தி, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தார். துணை முதல்வர் பதவி உள்ளிட்ட சில முக்கிய அதிகாரங்களை பெறும் முயற்சியில் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
ஆனால் இந்நிலையில் சென்னைக்கு வந்த அமித்ஷா, நேரடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பாஜக-அதிமுக கூட்டணியை உறுதி செய்ததைத் தொடர்ந்து, அந்த கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இதனால் விஜய் எண்ணிய கூட்டணிக் கனவு தகர்ந்துவிட்டது. தற்போது, அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் இணைவார்கள் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணியும் தற்போதைய நிலையில் உடையும் என தோன்றவில்லை.
 
இந்த சூழ்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், இரண்டு முக்கிய கூட்டணிகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அரசியல் பயணம் வெற்றியடையுமா, வலிமையற்ற தொடக்கமாக போய்விடுமா என்பதற்கான பதிலை காலமே சொல்ல வேண்டும்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்