உயிருக்கு உலை வைத்த இருமல் சிரப்; குழந்தைகள் பரிதாப பலி!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (12:31 IST)
இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 66 காம்பியா குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் பல்வேறு விதமான அத்தியாவசிய மருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில் அவை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அவ்வாறாக காம்பியா நாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வகத்தில் இருமல் சிரப்பை ஆராய்ந்தபோது, அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக டை எதிலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ: இளம்பெண் வன்கொடுமை செய்து தூக்கில் ஏற்றம்! – உத்தர பிரதேசத்தில் கொடூர சம்பவம்!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup என்ற இந்த 4 சிரப்புகளிலும் வேதியியல் பொருட்கள் நிர்ணயித்த அளவை விட அதிகமாக கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சிரப்புகளை ஹரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்து தர நிர்ணய ஆணையம் மற்றும் மெய்டன் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்திற்கு உலக சுகாதார அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்