ஆஸ்திரேலியா மைதானத்தை கலக்கிய 'கஜா நிவாரண நிதி' பதாகை

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (21:04 IST)
இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போட்டியை காண வந்த ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள்  "டெல்டாவை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர்" என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்தி இருந்தனர்.  தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களின் இந்த செய்கையை கேமிராக்கள் ஆர்வத்துடன் படம் பிடித்ததால் கஜா நிவாரண நிதி இன்று உலகம் முழுவதும் தொலைக்காட்சி வழியே தெரிந்தது.

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் சுறுசுறுப்பாக ஒருபுறம் கஜா நிவாரண உதவிகளை தன்னலம் கருதாமல் செய்து வரும் நிலையில் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்