கஜா புயல் பாதித்த ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன்: விஷால்

ஞாயிறு, 25 நவம்பர் 2018 (08:38 IST)
கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 

அந்த பகுதி மக்கள் பயிர்களும், வீடுகளும், பொருட்களை இழந்ததோடு, வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். 
 
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய விஷால், தத்தெடுக்க உள்ள கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்