தடுப்பூசி போடாதவங்களை கலாய்த்து கேவலப்படுத்துவேன்! – பிரான்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (08:30 IST)
பிரான்சில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களை கேவலப்படுத்துவேன் என அந்நாட்டு அதிபர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன பிரான்சில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர் இமானுவெல் மக்ரோன் “தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்த போவதில்லை. அவர்களுக்கு தியேட்டர்கள், உணவகங்கள் எங்கும் அனுமதி அளிக்கப்படாது. கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை நான் கேவலப்படுத்தப் போகிறேன். அவர்களை கோபப்படுத்துவேன். இதுதான் இனி அரசின் கொள்கை” என பேசியுள்ளார். விரைவில் பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்