பெட்ரோல் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படுகிறதா? அரசின் அதிரடி முடிவு

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (07:23 IST)
பெட்ரோல் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படுகிறதா?
பெட்ரோல் டீசல் கார்கள் உபயோகிப்பதன் காரணமாக காற்று மாசு அதிகரித்து வருவதால் பெட்ரோல் டீசல் கார்களுக்கு தடை விதிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரிட்டனில் வரும் 2030ஆம் ஆண்டு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரிட்டன் சாலைகளில் லட்சக்கணக்கான பெட்ரோல் டீசல் கார்கள் தினமும் சென்று கொண்டிருப்பதால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது 
 
இதனை அடுத்து 2040 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதன் பின்னர் அந்த திட்டம் 2035 க்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2030ஆம் ஆண்டு முதலே பெட்ரோல் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் முக்கிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்னும் 10 ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டில் ஒட்டுமொத்தமாக டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் பெட்ரோல் டீசல் கார்களின் விற்பனை மந்தமாகும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்