கொரோனா தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கோவிட்19 வைரஸ் தொற்று இப்போது இந்தியாவில் உக்கிரத்தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலைப் பரவலை விட இரண்டாம் அலையில் உச்சத்தைத் தொட்டு வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.