முன்னாள் அதிபரின் மகன் கத்தியால் குத்தி கொலை: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (06:53 IST)
முன்னாள்  ஜெர்மனி அதிபர் ரிச்சர்ட் வான் வெய்சேக்கர் என்பவரின் மகன் மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை ஜெர்மனி அதிபராக இருந்து அதன்பின் 2015ஆம் ஆண்டு மூப்பு காரணமாக காலமானவர் ரிச்சர்ட். இவரது மகன் பிரிட்ஸ் வான் வெய்சேக்கர் என்பவர் பெர்லினில் உள்ள ஒரு மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் பிரிட்ஸ்வான் கலந்து கொண்டபோது திடீரென அவரது அருகில் வந்த ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். உயிருக்காக போராடிய பல உயிர்களை காப்பாற்றிய பிரிட்ஸ்வான், அதே மருத்துவமனையில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இதனையடுத்து கத்தியால் குத்திய மர்ம நபரை பாதுகாப்பு போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். பிரிட்சின் மறைவுக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்