விமானத்துறை ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (07:22 IST)
இன்னும் ஒரு சில வாரங்களில் உலகம் முழுவதும் விமானத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன என்பது குறிப்பிடதக்கது. 
 
கடந்த நான்கு நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக தனியார் விமான நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் ஆயிரக்கணக்கான விமானத்துறை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்