இந்தியாவில் மேலும் 46 பேருக்கு ஒமிக்ரான்: மொத்த பரவல் 700ஐ தாண்டியது!

புதன், 29 டிசம்பர் 2021 (07:06 IST)
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
தமிழகம் கர்நாடகம் கேரளா புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் டெல்லி போன்ற வட மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் நாற்பத்தி ஆறு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 717 என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மிகிரான் வைரஸை தடுப் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்