வாட்ஸ்அப்பில் 5 நிறங்கள்: பயனர்களுக்கு ஏற்றார்போல் நிறத்தை மாற்றலாம்..!

Mahendran
வியாழன், 11 ஜனவரி 2024 (10:03 IST)
உலகம் முழுவதும் பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புது புது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஐந்து நிறங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பயனர்களுக்கு ஏற்றால் போல் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வாட்ஸ் அப் நிறத்தை மாற்ற செய்ய வேண்டியது என்ன?
 
1. உங்கள் Android அல்லது iOS சாதனத்தில் WhatsApp ஐத் திறக்கவும்.
2. மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்.
3. செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. "சாட்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. "தீம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 
இந்தப் பக்கத்தில். சிஸ்டம் டீபால்ட் , லைட் மற்றும் டார்க் ஆகிய வகையில் இருக்கும். அதன்பின் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா என ஐந்து நிறங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
 
வாட்ஸ் அப் தீம்  நிறத்தை மாற்றுவது உங்கள் சேட் அனுபவத்தைத் தனிப்பயனாக்க ஒரு சிறந்த வழியாகும். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்