திடீரென முடங்கிய 'X' சோஷியல் மீடியா தளம்: என்ன நடந்தது?
வியாழன், 21 டிசம்பர் 2023 (13:29 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான 'X' சோசியல் மீடியா திடீர் என சிறிது நேரம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ட்விட்டர் என்று கூறப்பட்ட சமூக வலைதளமான 'X' என்ற சமூக வலைதளம் சில மணி நேரங்களுக்கு முன்னால் திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் அதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்,.
அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அதிகம் பயன்படுத்தும் 'X' தளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் ஸ்தம்பித்து போயினர். இந்த நிலையில் சுமார் 20 நிமிடங்கள் வரை செயல்படாமல் இருந்த 'X' தளம் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
கடந்த சில நாட்களாக அடிக்கடி 'X' தளம் முடங்குவது பயனர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது,. இது குறித்து 'X' தளம் எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது