ஒரு ஆண்டுக்குப் பிறகு சீனாவில் முதல் பலி !

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (17:33 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு  சீனாவில் இருந்து முதன்முதலாக கொரொனா தொற்றுப் பரவ ஆரம்பித்து,  இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தொற்றுப் பரவி வருவியது.

சமீப நாட்களாக இத்தொற்றுப் பரவல் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் பல மாதங்களாக கொரொனா பலி  ஏற்படவில்லை; கடந்த ஆண்டு  ஜனவரி மாதம் கொரொனா உயிரிழப்பு ஏற்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு   நேற்று சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரொனாவால் உயிரிழந்தனர்.

ஹாங்காங் நாட்டில் கொரொனா பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.  நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்படுள்ளனர். இங்கு மொத்தம் 10 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்