அகதி சிறுவர்களுக்காக ஆதரவு திரட்டும் பிரபல நடிகை...

Webdunia
ஞாயிறு, 9 ஜூன் 2019 (17:26 IST)
ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகையான ஏஞ்சலினா ஜோலி தற்போது அகதி சிறுவர்களுக்காக ஆதரவு திரட்டி வருகிறார்.
ஹாலிவுட் நடிகையும், அமெரிக்கருமான ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் நல்லெண்ண தூதராக உள்ளார்.அவர் இருநாள் பயணமாக கொலம்பியா சென்றுள்ளார்.
 
இந்நிலையில் கொலம்லியாவில் தங்கியுள்ள அகதிகளைப் பார்வையிட்டு அவர்களின் குறைகளைக் கேட்டார். பின்னர் அந்நாட்டின் அதிபர் இவான் டூக்கை , கர்தேகேனாவில் சந்தித்துப் பேசினார்.
 
இதனையடுத்து, வெனிசுலாவிலிருந்து பெரு, கொலம்பியா மற்றும் சஈக்குவேடார் நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள 20000 க்கும் மேற்பட்ட சிறுவர்களின் நலன், ஆரோக்கியம் ,சுகாதாரம் ஆகியவற்றைக்குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
மேலும் அங்குள்ள அகதி சிறுவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிபருடன் கலந்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகிறது.
 
ஏஞ்சலினா ஜோலியும் பிராட் பிட்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அண்மையில் ஏஞ்சலினா ஜோலி புற்றுநோயிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்