வேலைக்குப் போகச் சொன்ன குடும்பத்தினர்…இளைஞர் ஆத்திரம்!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (00:29 IST)
அமெரிக்காவில் ஒரு இளைஞரை அவரது குடும்பத்தினர் வேலைக்குப் போகச் சொன்னதால் அவர் அவர்களைக் கொன்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் உள்ள அயோவா என்ற பகுதியில் வசித்து வருபவர் அலெக்சன் ஜான்சன்(20). இவர் நீண்டநாட்களாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் இவரது தாய், தந்தை அலெக்சன் ஜான்சனை வேலைக்குப் போகும்படி கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்சன் ஜான்சன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது தாய், தந்தை மற்றும் தங்கையைக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அலெக்சைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்