தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக இருந்து ஹாலிவுட் நடிகராக மாறியவர் டுவைன் ஜான்சன். அவரை எல்லோரும் தி ராக் என அழைத்து வருகின்றனர். இப்போது படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தும் ராக் தான் அளித்த ஒரு நேர்காணலில் அமெரிக்க மக்கள் விரும்பினால் தான் அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் என விளையாட்டாக கூறியிருந்தார். உடனே இது சமுகவலைதளங்களில் வைரலாக, இப்போது நடந்துள்ள ஆய்வு முடிவு ஒன்றில் ராக் அதிபராக 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.