உலகமெங்கும் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகெங்கும் மிகவும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 31ம் தேதி வரை சுமார் 194 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இதுபற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று காலை இட்ட பதிவில் “ இன்று காலை வரை பேஸ்புக் சமூகத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளனர். இந்த உலகத்தில் உள்ள மனிதரகளை இணைப்பதில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இது தொடரும். இது பெருமையாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பலரும் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.