ரூ.8 கோடி மதிப்புடைய வோட்கா பாட்டில் கொள்ளை...

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:24 IST)
உலகிலேயே அதிக விலை மதிப்புடைய வோட்கா பாட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 
டென்மார்க் தலைநகர் கோபன்ஹைகனில் வசித்து வரும் இங்க் பெர்க் என்பவர் மது பார் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு அவர் உலகிலேயே அதிக மதிப்புடைய ஒரு வோட்கா பாட்டிலை வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சமாகும்.
 
வெள்ளை மற்றும் தங்க நிறத்தால் ஆன அந்த வோட்கா பாட்டிலில், விலை உயர்ந்த வைரம் பதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த மது பாட்டிலை, அந்த நாட்டு வர்த்தகரிடமிருந்து கடனுக்காக இங்க் பெர்க் பெற்றுள்ளார். 
 
இந்த மதுபாட்டில் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையின் பூட்டை உடைத்து  கொள்ளையர் ஒருவர் அந்த வோட்கா பாட்டிலை திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
இந்த பாட்டில் மீது இங்க் பெர்க் இன்சூரன்ஸ் செய்யவில்லை. எனவே, காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்