அர்விந்த கெஜ்ரிவால் ஒரு நீல நிற வேகன்ஆர் காரை பயன்படுத்தி வருகிறார். அந்த காரில்தான் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதேபோல், தலைமை செயலகத்திற்கும் அந்த காரில்தான் வந்து செல்கிறார். 2013ம் ஆண்டு குந்தன் சர்மா என்பவர் அவருக்கு பரிசாக கொடுத்த கார் அது.
இந்நிலையில், தலமைச் செயலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து டெல்லி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.