மெக்ஸிகொஎல்லைசுவர்விவகாரத்தால் 30 நாட்களுக்கும்மேலாகநடந்துவந்தஅமெரிக்கஅரசுப்பணிகள்முடக்கத்தை அடுத்து தற்போது அவசர நிலை அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மெக்சிகோவில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க அமெரிக்க மெக்சிகோ எல்லையில் எல்லைச்சுவர் கட்டும் கோரிக்கையை முன்வைத்தார் ட்ரம்ப். இந்த திட்டத்திற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கவேண்டுமெனெவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாதென ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான பட்ஜெட் இதுவரை நிறைவேறவில்லை. மேலும் அமெரிக்க அரசு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டது. இதையடுத்து இந்த அரசுப்பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை முடிவெடுத்து அதில் அதிபர் ட்ரம்ப்பை கையெழுத்திட வைத்தனர்.
ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரத்தில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ட்ரம்ப் அப்போது அறிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் எல்லைச்சுவர் விவகாரத்தில் நிதி ஒதுக்க மறுப்பதால் அவசர நிலை அறிவிக்கும் முடிவில் ட்ரம்ப் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி.ஒருவேளை அவசர நிலை அறிவிக்கப்பட்டால் ட்ரம்ப்புக்குக் கிடைக்கும் வீட்டோ அதிகாரத்தால், ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவரால் எல்லைச்சுவருக்கான நிதியைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.