எலான் மஸ்கின் முன்னாள் மனைவி வயது குறைந்த நடிகருடன் விரைவில் திருமணம்

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (17:37 IST)
எலான் மஸ்கின் முன்னாள் மனைவி தன்னிலும் வயது குறைந்த நடிகரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

உலகின் நெம்பர் 1 கோடீஸ்வரராக எலான் மஸ்க் உள்ளார். இவர், டெஸ்லாவின் சிஇஓ, டுவிட்டரின் அதிபராகவும், ஸ்பேக்ஸ் எக்ஸ்ன் தலைவராகவும் உள்ளார்.

பல அதிரடி செயல்களுக்கு சொந்தக் காரரான இவரும் இவரது  மனைவி தலுலா ரிலேவும் கருத்து வேறுபாடு காரணமாக  கடந்த  2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த   நிலையில் எலான் மஸ்கின் முன்னாள் மனைவி தலுலா ரிலே தன்னிலும் 4 வயது இளையவரான  தாமஸ் பிராடி சாங்ஸ்டரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. இதை தற்போது தலுலா தன் சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இவர் கேம் ஆப் திரோன்ஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்